-ஞானத்தமிழ்-
வல்வெட்டித்துறை நகரசபை நடாத்தும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளை கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















