-பா.பிரதீபன்-
நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல்லைப்பிட்டியை சேர்ந்த 35 வயதான வாய்பேச முடியாத பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 27ஆம் திகதி நள்ளிரவு சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இது குறித்து உடனடியாக முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை மேற் கொண்டுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டு, நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்களுக்கு சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


















