-பா.பிரதீபன்-
கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது.
நேற்று முற்பகல் பிரதேச சபையில் வைத்து சுன்னாகம் பொலிஸாரால் குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் கந்தரோடை விகாரை மற்றும் கதுருகொட விகாரை என நாட்டப்பட்ட நான்கு பெயர்ப் பலகைகள் கடந்த 8 ஆம் திகதி பிரதேச சபையால் அகற்றப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பிலேயே நேற்றையதினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















