முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய இராமப்பிள்ளை கமலராசா (மகேந்தி) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றதுடன், பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















