யாழ். வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இத்தினங்களில் தினமும் காலை 9 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, பிற்பகல் மாலை 4 மணி முதல் பிள்ளையார் கதை படிப்பு, உருத்திரா அபிஷேக ஆராதனை, வசந்தமண்டப பூஜை, விநாயகர் அகவல் பாராயணம் என்பன இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 27 ஆம் திகதி காலை கணபதி ஹோமமும், கஜமுக சூரசங்காரமும் இடம்பெறுமென ஆலய தர்மபரிபாலன சபை அறிவித்துள்ளது.
















