-சி.ஜெகதீஸ்வரன்-
மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவநாதன் (வயது-47) என்பவராவார்.
பிறப்பில் இருந்தே கை கால் இயலாதவர் வாயினாலே சகல வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் வாயினால் மின்சார வயரினை றோல்பிளக்கில் கொளுவிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சாட்சிகளை யாழ்ப்பாணப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















