-ஞா.தமிழ்ச்செல்வன்-
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 23 வயதுக்கு உட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு யாழ். மாவட்ட அணி தெரிவுகள் இடம்பெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட அணி வீரங்கனைகள் தெரிவும் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான உதைபந்தாட்ட அணி தெரிவும், 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மாலை 4.30 மணி முதல் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட அணி தெரிவும் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பருத்தித்துறை வெளிச்சவீட்டுக் கடற்கரையில் கடற்கரை கபடி விளையாட்டு அணி தெரிவும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் கடற்கரை கரப்பந்தாட்ட அணி தெரிவும் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் பருத்தித்துறை உள்ளக அரங்கில் கபடி அணிக்கான தெரிவும் இடம்பெறவுள்ளது.
இத் தெரிவுகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள வீர, வீராங்கனைகள் தங்களது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்
அறிவித்துள்ளார்.


















