-சொ.வர்ணன்-
சத்ஜன கலாச்சார அறக்கட்டளையினால் தேசிய நீதியில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வீரமாதா தேசமான்ய அபிமானி விருது நல்லூர் விவாக, இறப்பு, பிறப்பு பதிவாளர் திருமதி வரலக்ஷ்மி சோமசூரியசிங்கத்திற்கு வழங்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அநுராதபுரத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த விருது வழங்கப்பட்டது .முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி வழங்கப்படுகின்ற வீரமாதா தேசமான்ய விருதைப் பெற்ற தமிழ் பெண்ணாக வரலட்சுமி சோமாசூரியசிங்கம் விளங்குகிறார்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக சர்வஜன மதகுருமார்கள், சத்ஜன கலாச்சார நிறுவனத்தின் தலைவர்கள், ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


















