-க.கனகராசா-
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் ஒரேற்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் ரி.லோகராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன், வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.செந்தில்குமரன், கௌரவ விருந்தினர்களாக யாழ். மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் என்.தயாபரன், ஓய்வு பெற்ற அதிபர் ஆர்.ஜோர்ச், வவுனியா ஸ்போர்ட்ஸ் கோனர் உரிமையாளர் எஸ்.கந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
















