சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் 115 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும் நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 1.05 மணிக்கு வித்தியாலய வித்துவான் விருத்தாசல மண்டபத்தில் அதிபர் எம்.சி. சுதாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஆறுமுகம் நற்குணேஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா, கௌரவ விருந்தினர்களாக முன்னாள் ஓய்வுநிலை அதிபர்களான நமசிவாயதேசிகர் பாலச்சந்திரன், சிங்காரம் திவாகரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். நிறுவுநர் நினைவுப் பேருரையை சட்டத்தரணி தர்ஷிகா முரகராசா ஆற்றவுள்ளார்.


















