சரண குணவர்தனவிற்கு எதிரான 4 ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இன்று!
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு ஊழல் வழக்குகள் மீதான தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) வழங்கவுள்ளது.
சரண குணவர்தன தேசிய லாட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, 2006ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் தீர்ப்புகள் முன்னதாக மே 26ஆம் திகதி வழங்கப்படவிருந்தன. எனினும், தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், தீர்ப்பு வழங்கும் திகதியையும் ஒத்திவைத்தார்.
இதனையடுத்து, இந்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் ஜூன் 9ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சரண குணவர்தன நிராகரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















