-சி.ஜெகதீஸ்வரன்-
மல்லாகம் நீலியம்பனைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த பொன்னர் பஞ்சலிங்கம் (வயது-69) என்ற ஏழு பிள்ளைகளின் தந்தையாவார்.
முற்பகல் வீட்டில் இருந்து வயலுக்கு சென்ற அவர் கிணற்றில் சடலமாக காணப்படுவதாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து, பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்லிப்பளைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


















