உலக சுற்றுலாத் தின நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மாவட்ட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை ஆகியன இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர தனுஜா முருகேசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஆரம்ப நிகழ்வு கலை கலாசார அணிவகுப்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பித்து முல்லைத்தீவு நகர கடற்கரையை வந்தடைந்தது.
உள்ளூர் உணவுகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நடனம், மல்லாட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச கலைஞர்களின் பண்டாரவன்னியன் நாடகம், முஸ்ஸிம் கலாசார கோலாட்டம் போன்றனவும் நடைபெற்றன.
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


















