இந்தியப் பிரதமர் மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து டிரம்ப் மேலும் கூறியதாவது,
பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த உறவு உள்ளது. அவர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என எனக்கு உறுதி அளித்தார். இருப்பினும் இந்தியாவால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறினார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் முடிவடையும்.
சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன். ஜனாதிபதி புடின் உக்ரைன் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். ரஷ்யர்கள் உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம்.
இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது மிகவும் எளிதாக்குகிறது. இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் மறைமுகமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான வர்த்தகம் பல மக்களை இழந்த இந்த அபத்தமான போரை ரஷ்யா தொடர அனுமதிக்கிறது – என்றார்.

















