-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்புவிழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை முதல்வர் த.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் பிரதம விருந்தினராகவும், சமுர்த்தி உத்தியோகத்தர் சு.சுபநாதன் சிறப்பு விருந்தினராகவும், பழைய மாணவர் சங்கப் பொருளாளர் கே.பகீரதன் மற்றும் கல்வி நம்பிக்கை நிதியத்தைச் சேர்ந்த கே.குகதாசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.


















