நான் தொலைபேசிகளூடாக இறந்து விட்டதாக வெளியான செய்தியைக் கேட்டவுடன் ஒருவித நகைச்சுவை உணர்வுக்கு ஆளானதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இறந்து விட்டதாக தொலைபேசிகளூடாக வெளியான செய்தியைக் கேட்டவுடன் ஒருவித நகைச்சுவை உணர்வுக்கு ஆளானேன்.
இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது, தமது ஆயுளை நீடிக்கும் என்று சிலர் நம்புகின்றனர்.இதனாலேயே இவ்வாறான தகவலை பரப்புகின்றனர்.
என்னைப் பொறுத்த வரையில்,இந்த செய்தியை யார் வெளியிட்டார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் தமக்கு ஆர்வம் இல்லை.உயிருடனிருக்கும் வரைக்கும்
அரசியலில் ஈடுபடுவேன். எனினும் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – என்றார்.


















