-பா.சதீஸ்-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
வீடுகளை அலங்கரித்தல், புதிய உடைகள் வாங்குதல், இனிப்புகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகர் பகுதியில் வழமைக்கு மாறாக பெரும் கூட்டம் காணப்படுகின்றது.
அத்துடன், வீதியோர வியாபாரிகளும் சிறப்பு சலுகைகள் வழங்கி விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு புதுக்குடியிருப்பு முழுவதும் ஒரு பண்டிகை பரவசம் நிலவுவதை அவதானிக்க முடிகிறது.


















