கிளி முயற்சியாளர் – 2025 என்னும் பெயரிலான தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இரு தினங்கள் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இக்கண்காட்சியினை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் இடம்பெற்ற குறித்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும், இராமலிங்கம் சந்திரசேகரன் ; கலந்து கொண்டிருந்தார்.
இக்கண்காட்சியில் உணவு,ஆடை,தோற்பொருள், கைப்பணி மற்றும் பனைசார் வியாபார உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அழகுக் கலை தொடர்பான சேவைகளும் இடம்பெற்றன.

















