சம்பூர் – கணேசபுரம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவர் அவசர நோயாளர் காவுவண்டி மூலமும், இருவர் முச்சக்கரவண்டியிலும் மூதூர் ஆதார வைத்தியசைலைக்கு கொண்டு செல் லப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுள் 38,18 மற்றும் 9 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 35,48 வயதுகளைச் சேர்ந்தவர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியு ள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் மது அருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடைவடைந்த நிலையில் மதுபான போதல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















