மழையினால் ஈரமாக இருந்த வீதியில் வழுக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சிலாபம் – வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் ஹயஸ் வாகனத்தின் பிரேக்குகள் முறையாக செயற்பட முடியாமல் வாகனம் இழுத்துச் செல்லப்பட்டு எதிரே வந்த லொறியு டன் மோதியுள்ளது. இதனால் இரு வாகன சாரதிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் கனமழையால் நிலைதடுமாறியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


















