-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்-
நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது
இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது-42) என்ற ஒரு பிள்ளையின் தாந்தையாராவார்.
குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கில் உள்ள தாயார் வீட்டில் இருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் மருந்து எடுத்துவந்து கதிரையில் உட்காந்திருந்த போது உயிரிழந்திருந்தார்.
சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலிப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
பிரேத பரிசோதனையில் நிமோனியா தொற்றால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


















