-கஜிந்தன்-
பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் நிருஜா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தை கடந்த 9ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
பின்னர் அன்றையதினமே தாயும் சேயும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் குறித்த குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். குடல் இறக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

















