பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பான துல்லியமான தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சரியான தகவல்கள் கிடைக்கும் வரை உண்மைகளை வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை.இருப்பினும், தொடர்புடைய விசாரணைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில் முன்கூட்டியே தகவல்களை வெளியிடுவது விசாரணையை பாதிக்கக் கூடும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் துல்லியமான தகவல்களை வழங்க முடியும் – என்றார்.


















