மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமாக காரைநகர் களபூமியை சேர்ந்த தர்மலிங்கம் லோகநாதன் பதவி உயர்வு பெற்றுள்ளார். சுங்க சேவையில் பதவி வழி உத்தியோகத்தர் அடையக் கூடிய ஆகக்கூடிய பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
1992 ஆம் ஆண்டு நடந்த போட்டி பரீட்சையில் தெரிவாகி, 1993 ஆம் ஆண்டு உதவி சுங்க அத்தியட்சராக நியமனம் பெற்ற லோகநாதன் 2016 ஆம் ஆண்டு சுங்க அத்தியட்சராகவும் 2024 ஆம் ஆண்டு சுங்கப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இவர் 1991 ஆம் ஆண்டு விஞ்ஞானமாணி பட்டத்தை யாழ். பல்கலைக்கழகத்திலும், 2009 ஆம் ஆண்டு முதுகலைமாணி பட்டத்தை இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்திலும் பெற்றார். இவர் சுங்கத் திணைக்கள இந்து ஊழியர் சங்கத்தின் தலைவரும், சுங்க மேற்பார்வை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரும் ஆவார்.


















