-த.சுபேசன்-
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஊடாக கிளிநொச்சி, அடம்பன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சிவேஸ்வரன் என்பவருடைய நிதிப் பங்களிப்பில் மேற்படி உதவித் திட்டம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழக உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டனர்.


















