பண்டாரகம, பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹொரணை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின்போது, காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியானை பகுதியைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவன் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை, ஹடமுனை சந்தி – ஹிங்குரக்ககொடை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின்போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னால் சென்றவர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஆகியோர் பொலன்னறுவை வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, காயங்களுக்குள்ளான பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


















