கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அ திக அக்கறை காட்டுகின்றது என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் தலைவர் முகமட் ஆழம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு எங்களுக்கு உரியது, இந்த நாடும் எங்களுக்கு உரியது, கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது.
வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடல் தொழிலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டி இருக்கின்றது என கூறிவருகிறார்.
இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு கடல் தொழில் சமூகமாகிய நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது நாங்கள். ஆகவே மீனவர்களுடைய நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் இழுவை மீன்பிடி படகு தொழில் நடைபெறுகின்றது அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் ஒரே நாளில் அதிக அளவு மீனவர்களை கைது செய்தது. கடந்த மாதம் ஐந்து படகுகளில் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது. இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம்.
இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் கடல் சார் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்படையினரும் திறமையாக செயல்படு கின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர்.
கடற்தொழில் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் இந்திய மினவர் அத்துமீறல்கள், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெளிவு படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகிப்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி மூல்லைத்தீவில் மீனவர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குறதியளிக்கப்பட்ட மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எங்கே என்ற தொனிப்பொருளில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த மீனவர் மாநாட்டு வடக்கிகு மீனவர்கள் கலந்து கொள்ளவேண்டும் அத்தோடு துறைசார் அதிகாரிகள், அரச சார்பற்றநிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள் – என்றார்.


















