‘நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச’ என பாதாள உலக குழுவை சேர்ந்த பெக்கோ சமனின் தொலை பேசியில் பெயர்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு நாமலா என்பது எமக்கு தெரியாது. ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மே லும் அவர் கூறுகையில்,
போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை. இலகுப்படுத்தப்போவதுமில்லை.
மாகந்துரே மதூஸ் வெளிப்படுத்திய உண்மைகள் அவருடன் புதைக்கப்பட்டன. மைத்திரி, ரணில், சஜித் ஆகியோர் அன்று அரசியல் குற்றவாளிகளை பாதுகாத்தார்கள். அதேபோல் கோத்தபாய மற்றும் ரணில் – ராஜபக்சக்கள் குற்றவாளிகளை பாதுகாத்தார்கள்.
நாமல் ராஜபக்சவின் சகாவான தங்காலைப் பிரதேச சபைத் தலைவர் வெளிநாட்டவர் ஒருவரை கொலை செய்தார். நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கையில் அதை அந்த பெண்ணின் கணவர் தடுத்துள்ளார்.
அதனால் அந்த வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டார். சம்பத் மனம்பேரி, பெகோ சமன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள். பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது? நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச’ என்று.
பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது பிறிதொரு நாமலா, என்பது எமக்கு தெரியாது. ஆனால் உண்மைகள் விரைவில் வெளிவரும் – என்றார்.


















