பொலன்னறுவை பகுதியில் நிலவி வருகின்ற வறண்ட காலநிலை நிலவி வருவதன் விளைவாக, பராக்கிரம சமுத்திரத்தில் அமைந்துள்ள மன்னர் முதலாம் பராக்கிரமபாகுவின் குளிர்கால அரண்மனையைப் பார்வையிட வாய்ப்பு உருவாகியுள்ளது.
வறண்ட காலநிலையின் விளைவாக பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் 58,000 ஏக்கர் அடியாகக் குறைந்ததையடுத்தே பராக்கிரம சமுத்திரத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த அரண்மனை பார்வையிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டின் பெரும்பகுதி நீரில் மூழ்கியே இருக்கும் இந்த 850 ஆண்டுக்கு மேலான குளிர்கால அரண்மனை, 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த வழியில் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















