-ஞானத்தமிழ்-
சுன்னாகம் றொட்டறிக் கழகம் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டியினை நடாத்தவுள்ளது.
இப்போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 6 வயதுக் கீழ் பிரிவு, 8 வயதுக் கீழ் பிரிவு, 10 வயதுக் கீழ் பிரிவு, 12 வயதுக் கீழ் பிரிவு, 14 வயதுக் கீழ் பிரிவு மற்றும் திறந்த பிரிவு என போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப் போட்டிகள் எதிர்வரும் முதலாம் திகதி மற்றும் இரண்டாம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் 0755430361, 0765574200 என்ற தொலைபேசி இலக்கங்களுடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















