-த.சுபேசன்-
நாவற்குழி பிரதேசத்தில் இயங்கி வரும் ANNAI HOLDINGS PRIVATE LTD உரிமையாளரினால் எமது சாவகச்சேரி பிரதேச சபைக்கு 3 புல் வெட்டும் இயந்திரங்கள் அன்பளிப்பாக செய்யப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் இராமநாதன் யோகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி இயந்திரங்கள் அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


















