மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியில் கனதர ஒயாவிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 41 ரவைகள், 2 ரவை கூடுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி ரவைகள் நேற்றுமுன்தினம் மதவாச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிமருந்துகளை அந்த இடத்திற்கு கொண்டுவந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிய, மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.


















