காத்தான்குடி பகுதியுள்ள குளத்தில் 66 வயதான ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் முதலை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த நபர் குளத்தில் குளித்தபோது முதலைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.


















