மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குருணாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

















