மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்றுமுன்தினம் முற்றுகையிட்ட பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்ததுடன், வீட்டிலிருந்து சுமார் 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதைபொருளை கைப்பற்றியதுடன், சுமார் 3 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏறாவூர் முதலாம் பிரிவு, கலைமகள் பாடசாலை வீதியில் உள்ள போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படும், வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதைபொருளுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாக போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக ஏறாவூர் பெரிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
சந்தேகநபரையும், சான்றுப் பொருட்களையும், பொலிஸார் மேற்று நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளனர்.


















