பொலன்னறுவை – நுவரகேயாய பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவினால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, தியபெதும பொலிஸ் பிரிவின் நுவரகேயாய பகுதியில், நேற்றுமுன்தினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து, புதையல் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை தியபெதும பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 20, 22 மற்றும் 43 வயதுடைய புத்தளம் மற்றும் அத்தனகடவல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், தியபெதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















