ரஸ்நாயக்கபுர – முடத்தவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த நபர் குழாய் உதவியுடன் மீன்பிடிக்கும் மீனவர் என்றும், நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடியபோது, ஏரியின் நடுவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் மொன்னேக்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சடலம் நிக்கவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















