யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் 103 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சமாசத்தின் தலைவர் சி.சுதர்சன் தலைமையில் சமாச கூட்டுறவாளர் மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான செல்வி அகல்யா செகராசா கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி. சந்திரசேகரன், தலைமை அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி. சிவகுமார், கௌரவ விருந்தினர்களாக யாழ். மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் ப. கேசவதாசன், யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர்களான இ.விஜயமோகனராசா, க.கமலநாதன்,பா.பாலரவி , யாழ்ப்பாணம் மக்கள் வங்கி முகாமையாளர் க.றமேஸ்நேசன், பணி நல கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் து. தங்கநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


















