தெல்லிப்பழை மாவைகலட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
பரஞ்சோதிமுனிவர் குருபூஜையை அடுத்து மாணவர்களின் கலை நிகழ்வும், சைவப்புலவர் சி.கா.கமலநாதனின் ‘இரவாதஞ்செய்த படலம் ‘ எனும் விடயப் பொருளில் சொற்பொழிவும், இடம்பெறும்.
சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டு, பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.


















