சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் குருபூஜை விழாவும் தெல்லிப்பழை மாவைகலட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
விழாவில் ஆன்மீக விருந்தினராக தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சுவாமி விபுலானந்தர் அடிகளார் குரபூஜையை அடுத்து சைவப்புலவர் பொன். சந்திரவேல் ‘சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமயப்பணி’ எனும் விடயப்பொருளில் சொற்பொழிவாற்றுவார்.
சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.


















