மாத்தளை – கம்பளை வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்த பெருமளவு மதனமோதக உ ருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளவத்துகொட பகுதியில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் மேற்படி முச்சக்கரவண்டியை வழிமறித்து சோதனை நடத்தியபோது அதனுள் இருந்து சுமார் 2375 மதனமோதக உருண்டைகளை பொலிஸார், கைப்பற்றியதுடன், அதனை கொண்டு சென்ற இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். 14 கிராம் எடை கொண்ட 95 பெட்டிகள் காணப்பட்டுள்ளன.
பெட்டி ஒன்றில் 25 உருண்டைகள் வீதம் இருந்துள்ளன. மேற்படி ஆயுர்வேத தயாரிப்புக்களில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்டு சிலரால் போதைக்காகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவை தயாரிப்பு மற்றும் இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லல் போன்றவற்றிற்கு அனுமதிப்பத்திரம் தேவை, அப்படியான அனுமதிப்பத்திரம் இன்றி இவை வைத்திருந்த குற்றத்திற்காகவும் எடுத்துச் சென்ற குற்றத்திற்காகவும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


















