எனது சத்திரசிகிச்சைக்கு எனது வீட்டை விற்றே செலவளித்தேன் என தெரிவித்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லையெனவும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
நான் நோய் வாய்ப்பட்டதையடுத்து எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் அதிக செலவு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்வதற்கு என்னிடம் பணம் இல்லாததால் பதுளையில் நான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்றேன். இந்த வீடு எனது தந்தை வழி உரிமையாகவே எனக்கு கிடைத்தது.
வீட்டை விற்ற பணத்தில் மருத்து செலவை செலுத்திவிட்டேன். எஞ்சிய பணத்தில் சிறிய வீடொன்றை கட்டிக்கொண்டு எஞ்சிய காலத்தை கடத்தப் போகின்றேன்.இங்கிருந்தே அரசியலிலும் ஈடுபடுவேன். ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லை.
பதுளையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசகையிலேயே மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்துள்ளார்.


















