-ஞானத்தமிழ்-
அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் சி.சதீஸ்வரன் தலைமையில், அச்சுவேலி மத்திய கல்லூரியின் இளையதம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி சாரதாதேவி ஆனந்தசயனன் பிரதம விருந்தினராகவும், கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கு. கண்ணதாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















