-த.சுபேசன்-
அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அடிகளாரின் விடியல் என்ற போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
மாற்றம் அறக்கட்டளையும், யாழ். மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வு மாற்றம் அறக்கட்டளை இயக்குனர் பே.பெனிக்னஸ் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், கௌரவ விருந்தினராக அருட்பணி சூசை டேமியன் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நூல் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன் ஆற்றியிருந்தார்.


















