போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், 24 மணித்தியாலமும் செயற்படும் வகையில் இந்த துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தக விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















