-சி.ஜெகதீஸ்வரன்-
கோண்டாவில் பகுதியில் மேல் மாடியில் மேசன் வேலை செய்த தொழிலாளி ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அச்செழு நீர்வேலியைச் சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது-56) என்ற இரண்டு பிள்ளைகளைகளின் தந்தையாவார்.
மேற்படி குடும்பத்தார் கடந்த 22 ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் மேல்மாடியில் மேசன் வேலை செய்யும் போது வெற்றிலை துப்ப முற்பட்ட போது தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















