முல்லைத்தீவு – குருந்தூர் மலையை சூழவுள்ள நிலங்களை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்ப டுத்தி அபகரிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் செய்த சதி வேலையை பௌத்த மதகுரு ஒருவர் அ ம்பலப்படுத்தியுள்ளதுடன் குற்றப் புலனாய்வு பிரிவிலும் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
மேற்படி விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடாகவே பௌத்த மதகுரு அம்பலப் படுத்தியுள்ளதுடன், குற்றப் புலனாய்வு பிரிவிற்கு தான் வழங்கிய முறைப்பாட்டின் பிரதி ஒன்றையும் கை யளித்துள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாணக்கியன் கூறுகையில், மிஹிந்தலையில் உள்ள பௌத்த மதகுரு ஒருவருடைய அi ழப்பின் பெயரில் நேற்று சனிக்கிழமை அவரை நேரில் சென்று சந்தித்தேன். இதன்போது குரந்தூர் மi ல பற்றிய சில விடயங்களை அவர் என்னுடன் கலந்துரையாடினார்.
அப்போது, விஹாராதிபதி எனக்கு எழுத்து மூலமான ஓரு கடிதத்தை வழங்கி இருந்தார். அதில் அவர் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு 21.07.2025ம் திகதி வழங்கிய முறைப்பாட்டின் பிரதி ஆகும். அ தில் ‘பொருள் திணைக்களத்தில் பிரதி அட்சத்தராக செயல்பட்ட ஜயதிலக்க
என்னும் நபர் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல் பொருள் திணைக்களம் கையகப்படுதியத்தை தெரியப்படுத்தியிருந்தார்.’
என்ற விடயத்தை குறிப்பிட்டுள்ளதுடன், அந்த ஆவணத்தை தருவதற்காகவே அழைத்ததாக தெரிவித்த hர். இதன்மூலம் தொல்லியல் திணைக்களம் மக்களின் விவசாய நிலங்களை அபகரிப்பதற்காக எடுத்தி ருந்த சதிவேலை அம்பலமாகியுள்ளது என்றார்.


















