-ஞானத்தமிழ்-
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நூலக தின விழாவும் இராம ஒளி-10 சஞ்சிகை வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு அருணாசலம் மண்டபத்தில் அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.இராமநாதன் பிரதம விருந்தினராகவும் கொழும்பு பொதுநூலக வெள்ளவத்தை கிளையின் நூலகர் திருமதி காஞ்சனமாலா உதயகுமாரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


















