-க.கனகராசா-
மாதகல் காந்திஜீ விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதியாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு குறித்த கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
காந்திஜீ விளையாட்டுக் கழகத் தலைவர் அ.நிதர்சன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், சிறப்பு விருந்தினராக மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வி.சிற்றம்பலம், கௌரவ விருந்தினர்களாக சமூக சேவையாளர் பூ.அன்பழகன், தமிழ் கொடிக் குழுமத்தின் பணிப்பாளர் திருமதி.டிவனியா, தெல்லிப்பளை பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர் தயாபரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.















