நாம் விலகிச் செல்லும் இயற்கையும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் திறந்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆயுர்வேத வைத்தியர் ப.சத்தியநாதன் கருத்துரைகளை வழங்கியிருந்தார். குறித்த கருத்துரைகளுக்கு பின்னர் பொதுமக்களிடமிருந்து எமது ஆரம்ப கால இயற்கையுடன் கூடிய வாழ்வியலால் ஏற்பட்ட நன்மைகள் தொடர்பாகவும் தற்போதைய வாழ்வியலால் ஏற்பட்ட நிலைகள் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பொதுஅமைப்பை சார்ந்தவர்கள் உட்பட பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















